ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இந்தியாவில் செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் 'ரெட்மி 10 பிரைம் ' ஸ்மார்ட்போன்

ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர்- 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

News image
இந்தியாவில் செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் 'ரெட்மி 10 பிரைம் ' ஸ்மார்ட்போன்
Updated On :25 ஆகஸ்ட் 2021, 11:33 am

DIN

ஸியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மி தன்னுடைய புதிய ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர்- 3 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

ரெட்மி 10 பிரைம் என்கிற பெயரில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போனின் விளம்பரத்தில்  ' ஆல் ரவுண்டு சூப்பர் ஸ்டார் ' என்கிற அறிவிப்போடு இத்தகவலை ஸியோமி நிறுவனம்  பகிர்ந்திருக்கிறது.

ரெட்மி 10 பிரைம் -ன் சிறப்பம்சங்கள் :

* 6.5 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* மீடியாடெக் ஹெலியோ ஜி 88 , சிஓசி அமைப்பை கொண்டிருக்கிறது 

*உள்ளக நினைவகம் 4 மற்றும் 6 ஜிபி , கூடுதல் நினைவகம் 64 மற்றும் 128 ஜிபி 

*பின்பக்கம் 50 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 8 எம் பி அளவை கொண்டிருக்கிறது.

*5000 எம்ஏஎச்  பாட்டரி வசதி 

மேலும் முதலில் நீல நிறத்தில் மட்டுமே வெளியாகும் ரெடிமி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விற்பனை விலை ரூ.10,000 ஆக இருக்கலாம் என்றும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த பின் அதனை அமேசான் , பிளிப்கார்ட் மற்றும் ரெட்மி விற்பனை கடைகளிலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.