தனித்தன்மை வாய்ந்த பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் தற்போது புதிய பாதுகாப்பு வசதியை உருவாக்கியிருகிறார்கள்.
பெருந்தொற்று காரணமாக உலகம் முழுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமான சூழலில் ஒருவரின் முகம் ஒருவருக்கு முழுதாக தெரிவதில்லை. இதைக்கொண்டு முகக்கவசம் அணிந்திருந்தாலும் 'முகத்தை அறியும்' வசதியை ஆப்பிள் 'ஐபோன் 13' ஸ்மார்ட்போன் வழங்க இருக்கிறது.கடவுச் சொல்லைப்போல 'ஃபேஸ் டிடெக்சன்' எனப்படும் முகத்தை காட்டி உள் நுழைகிற வசதியை பல ஸ்மார்ட்போன்களும் கொண்டிருக்கிறது.
ஆனால் கரோனா காலத்திற்கு பின் முகக்கவசத்தை எடுத்த பின்பே முகத்தை காட்ட முடியும் என்பதால் இந்த வகை பாதுகாப்பை பொதுவெளியில் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக தற்போது முகக்கவசத்தையும் கண்ணாடியையும் எடுக்காமலே நம் முகத்தை அறியும் புதிய வசதியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
இதையும் படிக்க | 10 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்த ஆப்பிள் 'ஸ்மார்ட் வாட்ச்'
ஆப்பிள் 'ஐபோன் 13' ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் அன்று சந்தையில் அறிமுகமாகும் நிலையில் அதன் முக்கிய அம்சங்களை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
ஐபோன் 13 சிறப்பம்சங்கள் :
* புதிய ஃபேஸ் ஐடி
* நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஏ 15 தொழில்நுட்பம் , 5எம்என் வேவ் லெந்த்
*ஸ்னாப் ட்ராகன் எக்ஸ் 60 5ஜி மோடம்
*லிடார் சென்சார்
* நீண்ட பாட்டரி வசதி
ஐபோன் 12 யை விட மேலும் முன்னகர்ந்து முக்கிய தொழில்நுட்பத்துடன் வெளியாக இருக்கிறது ஐபோன் 13 .
இனி ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் பிற ஸ்மார்ட்போன்களிலும் இந்த முகக்கவசத்தை எடுக்காமல் முகத்தை அறிகிற 'ஃபேஸ் ஐடி' இடம்பெறும் என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


