10 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்த ஆப்பிள் 'ஸ்மார்ட் வாட்ச்'

உலகம் முழுவதும் சுவர் கடிகாரத்திற்கு ஒரு மதிப்பு இருப்பதைப் போல கைகளில் கட்டிக்கொள்ளும் கடிகாரத்திற்கும் பெரிய வரவேற்பு இருக்கிறது. அதிலும் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த கடிகாரங்களில் நேரம் காட்ட
10 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்த ஆப்பிள் 'ஸ்மார்ட் வாட்ச்'
10 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்த ஆப்பிள் 'ஸ்மார்ட் வாட்ச்'

உலகம் முழுவதும் சுவர் கடிகாரத்திற்கு ஒரு மதிப்பு இருப்பதைப் போல கைகளில் கட்டிக்கொள்ளும் கடிகாரத்திற்கும் பெரிய வரவேற்பு இருக்கிறது. அதிலும் பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த கடிகாரங்களில் நேரம் காட்டுவதைத் தாண்டி பல அம்சம்களும் செயலியாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'ஸ்மார்ட் வாட்ச் ' இதுவரை 10 கோடி வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது . 

இந்தாண்டின் 2வது காலாண்டின் நிலவரப்படி ஆப்பிள் 'ஸ்மார்ட் வாட்ச்' களின் விற்பனை 27 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

கவுன்ட்டர் பாயிண்ட் ஆய்வு நிறுவனத்தின் தகவலின் படி ,' ஸ்மார்ட்போன்களின் வருகைக்குப் பின் 'ஸ்மார்ட் வாட்ச்' களின் விற்பனை விகிதம் குறையும் என எதிர்பார்த்த நிலையில் அதை பாதிக்காத வகையில் அதற்கான தனி வாடிக்கையாளர்களை 'ஸ்மார்ட் வாட்ச்'கள் பெற்றிருக்கிறது ' என தெரிவித்தனர். 

ஆப்பிள் நிறுவனத்தின் தனித்தன்மையான உருவாக்கமும் , தரமும் , அதன் மதிப்புமே பெரிய விற்பனையை சாத்தியப்படுத்துகின்றன என்று மூத்த வல்லுநர் சுஜியோங் லிம் தெரிவித்திருக்கிறார்.

மேலும் 'ஸ்மார்ட் வாட்ச்' தயாரிப்பில்  முன்னணியில் இருக்கும் மற்ற நிறுவனங்களான சாம்சங் 43 சதவீதமும் கர்மின் 62 சதவீதமும் விற்பனை வளர்ச்சியை அடைந்திருக்கின்றன.

இந்தக் கடிகாரங்களின் சந்தை மதிப்பு அதிகரித்தற்கு கரோனா தொற்று முக்கிய காரணமாக கருதப்படுகிறது . தொற்றுக்கு பின்தான் உடலை கவனிக்க மக்கள் தொடங்கியிருப்பதால் இந்த 'ஸ்மார்ட் வாட்ச்'கள்  உடல் வெப்பத்தின் அளவையும் , இதயத் துடிப்பின் அளவையும் கண்காணிப்பதால்  இதன் விற்பனை அதிகரித்திருக்கிறது என லிம் தெரிவித்தார்.

முக்கியமாக 100 டாலர் மதிப்பில் கிடைக்கும் இந்த கடிகாரங்கள் கூட பல வசதிகளுடன் இருப்பதும்  ரியல் மீ , ஒப்போ மற்றும் இந்திய தயாரிப்பான போட் , நாய்ஸ் போன்ற நிறுவனங்களே  'ஸ்மார்ட் வாட்ச்'களின் சந்தை மதிப்பை அதிகரிக்கச் செய்ததற்கு முக்கிய காரணங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com