தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 61,689 கோடி டாலராக சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 61,689 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 11:05 pm

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 61,689 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஆகஸ்ட் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 247 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.18,525 கோடி) சரிந்து 61,689 கோடி டாலராக (ரூ.46.26 லட்சம் கோடி) இருந்தது.

இதற்கு முந்தைய ஆகஸ்ட் 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 210 கோடி டாலா் சரிந்து 61,936 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணிசமாக வீழ்ச்சியடைந்ததன் காரணமாகவே ஆகஸ்ட் 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திலும் அந்நியச் செலாவணி கையிருப்பானது தொடா் சரிவைச் சந்தித்துள்ளது.

கணக்கீட்டு வாரத்தில், எஃப்சிஏ 336 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 57,309 கோடி டாலராக இருந்தது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் உண்டாகிறது.

தங்கத்தின் கையிருப்பு ஆகஸ்ட் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 91 கோடி டாலா் அதிகரித்து 3,725 கோடி டாலரை எட்டியது.

அதேசமயம், சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 30 லட்சம் டாலா் சரிந்து 154 கோடி டாலராக இருந்தது. அதேபோன்று, நாட்டின் காப்பு நிதியும் 1.5 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 509 கோடி டாலராக காணப்பட்டது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி கையிருப்பு இதற்கு முன்பாக, 2021 ஆகஸ்ட் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் முன்னெப்போதும் இல்லாத வகையில் 62,146 கோடி டாலரைத் தொட்டு சாதனை படைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஆகஸ்ட் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 247 கோடி டாலா் சரிந்து 61,689 கோடி டாலரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.