இரண்டு நாள்களாக இறக்கத்தில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றத்தை அடைந்திருக்கிறது.
தொற்று பரவல் செய்தி எதிரொலியாக பலர் பங்குகளை அவசரத்தில் விற்பதாலும் , சந்தை வீழ்ச்சிக்கு பயந்தும் சிலர் கிடைத்த லாபத்தில் பங்குகளை விற்பதால் கடந்த சில நாட்களாகவே பங்குச் சந்தை கடும் சரிவில் இருந்த நிலையில் இன்று சந்தையின் வரத்தகம் உயர்வில் முடிவடைந்திருக்கிறது.
அதன் படி நேற்று(டிச.6) 56,747.14 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,125.98 புள்ளிகளில் தொடங்கிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 886.51 புள்ளிகள் உயர்ந்து 57,633.65 புள்ளிகளுடன் நிலைபெற்றது .
17,044.10 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 264.45 புள்ளிகள் அதிகரித்து 17,176.70 புள்ளிகளில் நிலைபெற்றது.
முன்னதாக நேற்று(டிச.6) நிஃப்டி 16,912.25 புள்ளிகளுடன் நிறைவடைந்த நிலையில் மீண்டும் இரண்டு நாள்கள் கழித்து 17,100 புள்ளிகளைக் கடந்திருக்கிறது.
மேலும் தொடர்ந்து ஏற்றமும் இறக்கமும் அடைந்து வருகிற பங்குச்சந்தை புதிய வகை கரோனா தொற்றின் செய்திகளால் மேலும் பலவீனமடைய வாய்ப்பு இருப்பதாக துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


