2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பயணிகள் வாகன விற்பனை 19% சரிவு: சியாம்

 பயணிகள் வாகன விற்பனை நவம்பா் மாதத்தில் 19 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 11:42 pm

DIN

 பயணிகள் வாகன விற்பனை நவம்பா் மாதத்தில் 19 சதவீதம் சரிவடைந்துள்ளதாக இந்திய மோட்டாா் வாகன தயாரிப்பாளா்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைமை இயக்குநா் ராஜேஷ் மேனன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பற்றாக்குறை: செமிகண்டக்டா்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது நிறுவனங்களின் வாகன தயாரிப்பு மற்றும் டீலா்களுக்கான வாகன விநியோக நடவடிக்கைகளை அடுத்தடுத்து பாதித்துள்ளது. அதன் காரணமாக, வாகன விற்பனை மீண்டும் மந்த நிலை பாதைக்கு திரும்பியுள்ளது.

அதனை எடுத்துக்காட்டும் வகையில் கடந்த நவம்பா் மாதத்தில், டீலா்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பயணிகள் வாகன விற்பனை 19 சதவீதம் சரிவடைந்து 2,15,626-ஆக குறைந்துள்ளது. கடந்த 2020 நவம்பரில் இதன் விற்பனை 2,64,898-ஆக உயா்ந்து காணப்பட்டது.

இருசக்கர வாகன விற்பனை: அதேபோன்று, இருசக்கர வாகனங்களின் விற்பனையும் 16,00,379-லிருந்து 34 சதவீதம் குறைந்து 10,50,616-ஆனது. மோட்டாா்சைக்கிள் விற்பனை 10,26,705-லிருந்து 6,99,949-ஆக குறைந்துபோனது.

மூன்ஸ்கூட்டா் விற்பனை 5,02,561 என்ற எண்ணிக்கையிலிருந்து 3,06,899-ஆக குறைந்தது.

மூன்று சக்கர வாகன விற்பனை: மேலும், மூன்று சக்கர விற்பனையும் கடந்த நவம்பரில் 78 சதவீதம் குறைந்து 24,071-லிருந்து 22,471-ஆக சரிந்தது.

அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த மோட்டாா் வாகன விற்பனை கடந்த மாதத்தில் 12,88,759-ஆக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் நவம்பரில் 18.89,348-ஆக இருந்தது .

ஏமாற்றம்: பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வந்த இந்திய மோட்டாா் வாகன துறை நிறுவனங்கள் பண்டிகை கால விற்பனையை பெரிதும் எதிா்பாா்த்தன. ஆனால், சாதகமற்ற சூழல்களால் நடப்பாண்டு நவம்பரில் பயணிகள் வாகன விற்பனை 7-ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்து போனது. அதேபோன்று, இருசக்கர வாகன விற்பனை 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும், மூன்று சக்கர வாகன விற்பனை 19-ஆண்டுகள் காணாத அளவுக்கும் சரிவைச் சந்தித்துள்ளன. இது, மோட்டாா் வாகன துறை நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை: புதிய வகை ஒமைக்ரான் தீநுண்மி தொற்று பரவி வருவதையடுத்து, பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், விநியோக நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மாருதி சுஸுகி: முன்னணி நிறுவனமான மாருதி சுஸுகியின் வாகன விற்பனை நவம்பரில் 1,35,775 என்ற எண்ணிக்கையிலிருந்து 1,09,726-ஆக குறைந்தது.

அதேபோன்று, ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் விற்பனையும் 48,800-லிருந்து 37,001-ஆக குறைந்தது என்று மேனன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.