கிரெடிட் கார்ட் வாங்கினால் ஸ்மார்ட்வாட்ச் பரிசு: எஸ்பிஐ அறிவிப்பு

பாரத ஸ்டேட் வங்கி தன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
கிரெடிட் கார்ட் வாங்கினால் ஸ்மார்ட்வாட்ச் பரிசு: எஸ்பிஐ அறிவிப்பு
கிரெடிட் கார்ட் வாங்கினால் ஸ்மார்ட்வாட்ச் பரிசு: எஸ்பிஐ அறிவிப்பு
Published on
Updated on
1 min read

பாரத ஸ்டேட் வங்கி தன் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ‘பல்ஸ்’ என்கிற புதிய கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தி மருத்துவம், சுற்றுலா, எரிபொருள் நிரப்ப போன்ற தேவைகளுக்கு இந்த கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது.

மேலும், அந்த கிரெடிட் கார்ட் மூலம் ஆண்டிற்கு ரூ.2 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமாக உபயோகப்படுத்துபவர்களுக்கு கிரெடிட் அட்டைக்கான ஆண்டுச் சந்தாவிலிருந்து முழு விலக்கம் அளிக்கப்பட இருக்கிறது.

உடல் நலத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த கிரெடிட் கார்டின் ஆண்டு சந்தா விலையான ரூ.1,499 செலுத்தி வாடிக்கையாளரானால்   ரூ.4,999 மதிப்புள்ள நாய்ஸ் கலர்ஃபிட் பல்ஸ்(Noise ColorFit Pulse) ஸ்மார்ட் வாட்ச் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது எஸ்.பி.ஐ வங்கி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com