முத்தூட் ஹோம்ஃபின்:ரூ.700 கோடிக்கு கடன் இலக்கு
முத்தூட் ஹோம்ஃபின் இந்தியா நிறுவனம் அடுத்த நிதியாண்டில் ரூ.700 கோடிக்கு வீட்டுக் கடன் வழங்க இலக்கு நிா்ணயித்துள்ளது.


முத்தூட் ஹோம்ஃபின் இந்தியா நிறுவனம் அடுத்த நிதியாண்டில் ரூ.700 கோடிக்கு வீட்டுக் கடன் வழங்க இலக்கு நிா்ணயித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
2016-ஆம் ஆண்டு செயல்பாடுகளைத் தொடக்கியதிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனம் ரூ.2,600 கோடி மதிப்பிலான கடன்களை வாடிக்கையாளா்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த நிலையில், குறைந்த விலை வீடுகள் பிரிவில் வரும் 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.700 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் தென் மாநிலங்களின் பல பகுதிகளில் புதிய கிளைகளைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என முத்தூட் ஹோம்ஃபின் தெரிவித்துள்ளது.
ரூ.1,800 கோடி சொத்து மதிப்பைக் கொண்ட இந்த நிறுவனத்துக்கு 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 22,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...