வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ரூ.10,000 கோடிக்கு பங்குகள் விற்பனை: டாடா சன்ஸ்

டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் (டிசிஎஸ்) பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் ரூ.10,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக டாடா சன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 7:29 pm

DIN


புது தில்லி: டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் (டிசிஎஸ்) பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் ரூ.10,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக டாடா சன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

டிசிஎஸ் நிறுவனம் பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக அண்மையில் அறிவித்தது. இதையடுத்து டிசிஎஸ் நிறுவனத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு உள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 1 சதவீதத்தை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, டிசிஎஸ் நிறுவனத்தின் 3.33 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் பங்கு ஒன்றின் விலை ரூ.3,000-ஆக நிா்ணயிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் இந்த பங்கு விற்பனை மூலம் டாடா சன்ஸ் ரூ.9,997 கோடியை திரட்டிக் கொண்டுள்ளது.

இந்த பங்கு விற்பனையை அடுத்து டிசிஎஸ் நிறுவனத்தில் டாடா சன்ஸ் பங்கு மூலதனம் 72.16 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணயில் உள்ள டிசிஎஸ் நிறுவனம் ரூ.16,000 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.