மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம்

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

News image
பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம் (கோப்புப்படம்)
Updated On :8 ஜனவரி 2021, 5:15 am

DIN

பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று காலை உயர்வுடன் தொடங்கியது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 436 புள்ளிகள் உயர்ந்து 48,533.52 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மொத்த வர்த்தகத்தில் இது 0.92 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 145.30 புள்ளிகள் உயர்ந்து 14,283.85 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மொத்த வர்த்தகத்தில் இது 1.05 சதவிகிதம் உயர்வாகும்.

இதன் மூலம் பங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

பங்குச்சந்தையில் டெக்மஹிந்திரா, லார்சன் அண்ட் டர்போ, அல்ட்ரா டெக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.

டெக்மஹிந்திரா 3.26 சதவிகிதமும், லார்சன் அண்ட் டர்போ 3.22 சதவிகிதமும், அல்ட்ரா டெக் 2.65 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

டைட்டன், நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.