பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

பங்குச்சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 47 ஆயிரம் புள்ளிகளாக வர்த்தகமாகிறது. நிஃப்டி 13 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்தது.

News image
பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2021, 10:28 am

DIN

பங்குச்சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 47 ஆயிரம் புள்ளிகளாக வர்த்தகமாகிறது. நிஃப்டி புள்ளிகளும் சரிந்து 13 ஆயிரத்திற்கும் கீழ் வர்த்தகமாகிறது.

ஜனவரி 4-ம் தேதிக்கு பிறகு பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 937.66 புள்ளிகள் சரிந்து 47,409-ஆக வர்த்தகமாகிறது. இது மொத்த வர்த்தகத்தில் 1.94 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 273.75  புள்ளிகள் சரிந்து 13,967.50-ஆக வர்த்தகமாகிறது. இது மொத்த வர்த்தகத்தில் 1.91 சதவிகிதம் சரிவாகும்.

சன்பார்மா, டைட்டன், ஐசிஐசிஐ, எச்.சி.எஃப்.சி., ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன.

அதிக அளவாக ஆக்சிஸ் வங்கி 4.05 சதவிகிதமும், டைட்டன் 3.88 சதவிகிதமும், எச்.டி.எஃப்.சி. 3.60 சதவிகிதமும், ஐசிஐசிஐ 2.90 சதவிகிதமும் சரிந்துள்ளன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில், 24 நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. பங்குச்சந்தையில் 6 நிறுவனப் பங்குகள் மட்டுமே உயா்ந்து காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.