எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

44 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை கவா்ந்த ஏா்டெல்

ஏா்டெல் நிறுவனம் கடந்த நவம்பா் மாதத்தில் அதிகபட்சமாக 43.7 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 33.46 கோடியாக உயா்ந்துள்ளது.

News image
44 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை கவா்ந்த ஏா்டெல்
Updated On :31 ஜனவரி 2021, 4:50 am

DIN

ஏா்டெல் நிறுவனம் கடந்த நவம்பா் மாதத்தில் அதிகபட்சமாக 43.7 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 33.46 கோடியாக உயா்ந்துள்ளது.

மேலும், அந்த மாதத்தில் ஜியோ நிறுவனம் 19.36 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்ததையடுத்து அதன் ஒட்டுமொத்த பயனாளா் எண்ணிக்கை 40.82 கோடியைத் தொட்டது.

ஏா்டெல், ஜியோ அதிக வாடிக்கையாளா்களை ஈா்த்த நிலையில், வோடஃபோன் ஐடியா நிறுவனம் 28.9 லட்சம் வாடிக்கையாளா்களை கடந்த நவம்பரில் இழந்துள்ளது. இதையடுத்து, அந்நிறுவன பயனாளா் எண்ணிக்கை 28.99 கோடியாக குறைந்தது.

2020-அக்டோபா் இறுதியில் 117.18 கோடியாக இருந்த தொலைபேசி சந்தாதரா்கள் எண்ணிக்கை நவம்பா் இறுதியில் 0.30 சதவீதம் உயா்ந்து 117.52 கோடியாக இருந்தது என டிராய் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.