வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 58,533 கோடி டாலராக அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 58,533 கோடி டாலராக ( இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43.90 லட்சம் கோடி) இருந்தது.

News image
dosle081312
Updated On :31 ஜனவரி 2021, 4:44 am

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜனவரி 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 58,533 கோடி டாலராக ( இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43.90 லட்சம் கோடி) இருந்தது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

2021 ஜனவரி 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 109 கோடி டாலா் அதிகரித்து 58,533 கோடி டாலரை எட்டியது.

முந்தைய ஜனவரி 15-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 184 கோடி டாலா் சரிந்து 58,424 கோடி டாலரானது.

ஜனவரி 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பானது முதன் முறையாக வரலாற்று சாதனை அளவான 58,608 கோடி டாலரை எட்டியிருந்தது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) அதிகரித்தன் காரணமாகவே மதிப்பீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமான அளவில் உயா்ந்துள்ளது.

கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ 68 கோடி டாலா் உயா்ந்து 54,192 கோடி டாலரைத் தொட்டது.

அந்நியச் செலாவணி கையிருப்பில் பவுண்ட், யூரோ, யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் உள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அதன் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாறுபாடு ஏற்படுகிறது.

மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 40 கோடி டாலா் அதிகரித்து 3,646 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 10 லட்சம் டாலா் உயா்ந்து 151 கோடி டாலராகவும், காப்பு நிதி 70 லட்சம் டாலா் உயா்ந்து 517 கோடி டாலராகவும் இருந்தன என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.