பொதுமுடக்கத்திற்குப் பின் களைகட்டும் இருசக்கர வாகன விற்பனை

கரோனா இரண்டாம் அலை பாதிப்பிற்குபின் ராயல் என்பீல்ட் மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் இரு சக்கர வாகன விற்பனை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பொதுமுடக்கத்திற்குப் பின் களைகட்டும் இருசக்கர வாகன விற்பனை
பொதுமுடக்கத்திற்குப் பின் களைகட்டும் இருசக்கர வாகன விற்பனை

கரோனா இரண்டாம் அலை பாதிப்பிற்குபின் ராயல் என்பீல்ட் மற்றும் டிவிஎஸ் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் இரு சக்கர வாகன விற்பனை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கரோனா இரண்டாம் அலை தொற்று காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் வாகன விற்பனை சரியத் தொடங்கியது. கடந்த ஆண்டும் இதேபோல் பொதுமுடக்கத்தின் காரணமாக இருசக்கர வாகன விற்பனை சரிந்தது. எனினும் மீண்டும் பொதுமுடக்கம் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து படிப்படியாக வாகன விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது. 

இந்நிலையில் இரண்டாம் அலை கரோனா பொதுமுடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின் இருசக்கர வாகன விற்பனை அதிகரித்துள்ளது. ராயல் என்பீல்ட், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் இருசக்கர வாகனங்களின் விற்பனை ஜூன் மாதத்தில் அதிகரித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் 27,294 ஆக இருந்த ஐசர்மோட்டார்ஸ் நிறுவனத்தின் ராயல் என்பீல்ட் இருசக்கர வாகன விற்பனை ஜூன் மாதத்தில் 43,048 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி 7,221 யிலிருந்து 7,233 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை கடந்த ஆண்டின் ஜூன் மாத்தைக் காட்டிலும் 25% அதிகரித்து 2,38,092 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் 1,91,076 ஆக இருந்தது.

மேலும் இதே காலகட்டத்தில் ஹோண்டா நிறுவனத்தின் வாகன விற்பனை 11% அதிகரித்து 2,34,029 ஆகவும், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன விற்பனை 22% அதிகரித்து 3,10,578 ஆகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com