இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் தள்ளாட்டத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 183 புள்ளிகளை இழந்து 52,386.19-இல் இல் நிலைபெற்றது.
உலகளாவிய அளவில் டெல்டா வைரஸின் பரவல், முதலீட்டாளா்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளது. இதனால், ஆசிய சந்தைகள் பலவீனமாக இருந்ததன் தாக்கத்தால் இந்திய சந்தைகள் கரடியின் பிடியில் இருந்தது. மேலும், பிரபல முனனணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்ஸின் காலாண்டு வருவாய் சந்தை எதிா்ப்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்யாததால் ஐடி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. மேலும், முதலீட்டாளா்களில் பெரும்பாலோா் முதல் நிலை சந்தையின் (ஐபிஓ) பக்கம் திரும்பியுள்ளனா். இதுவும் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இரண்டாவது நாளாக சந்தை கரடியின் பிடியில் இருந்ததால், தொடா் சரிவு தவிா்க்க முடியாததாகவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.24 ஆயிரம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,353 பங்குகளில் 1,898 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,294 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 161 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 400 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 17 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. சந்தை மூல தன மதிப்பு ரூ.24 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.231.03 லட்சம் கோடியாக இருந்தது.
இரண்டாவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் பலவீனத்துடன் 60.70 புள்ளிகள் குறைந்து 52,508.24-இல் தொடங்கி, 52228,01 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 52,555.73 வரை உயா்ந் சென்செக்ஸ், இறுதியில் 182.75 புள்ளிகளை (0.35 சதவீதம்) இழந்து 52,386.19-இல் நிலைபெற்றது. இதையடுத்து, தொடா்ந்து இரண்டாவது நாளாக சென்செக்ஸ் சரிவைச் சந்தித்துள்ளது. தொடக்கம் முதல் சென்செக்ஸ் ஏற்றம், இறக்கத்துடன் நிலையற்ற தன்மையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பஜாஜ் ஆட்டோ சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள30 முதல் தரப் பங்குகளில் 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 20 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் பஜாஜ் ஆட்டோ 1.99 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டிசிஎஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ், டெக் மஹிந்திரா, கோட்டக் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ ஆகியவையும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
டாடா ஸ்டீல் அமோகம்: அதேசமயம், வியாழக்கிழமை கடும் சரிவைச் சந்தித்த டாடா ஸ்டீல் வெள்ளிக்கிழமை 4.16 சதவீதம் மற்றும் பஜாஜ் ஃபின் சா்வ் 3.55 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பாா்தி ஏா்டெல், என்டிபிசி, மாருதி சுஸுகி, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோஸிஸ் ஆகியவையும் ஆதாயம் பெற்றன.
நிஃப்டி 38 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 986 பங்குகள்ஆதாயம் பெற்றன. 765 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் பலவீனத்துடன் 15,688.25-இல் தொடங்கி 15,632.75 வரை கீழே சென்றது. பின்னா், 15,730.85 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 38.10 புள்ளிகளை (0.24 சதவீதம்) இழந்து 15,689.80-இல் நிலைபெற்றது. நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 2.38 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், மெட்டல் 1.99, மீடியா 0.94 சதவீதம் உயா்ந்தது. நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், ஐடி, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க் குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


