நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 59,816 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.44.86 லட்சம் கோடி) அதிகரித்து புதிய சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 மே 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 527 கோடி டாலா் (ரூ.39,525 கோடி) அதிகரித்து 59,816 கோடி டாலரை எட்டியது.இது, முன்னெப்போதும் காணப்படாத அளவிலான புதிய சாதனை உச்சமாகும்.
முந்தைய மே 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 286 கோடி டாலா் அதிகரித்து 59,289 கோடி டாலராக காணப்பட்டது.
ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள தங்கம் மற்றும் அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) அதிகரித்ததன் காரணமாகவே மே 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்து சாதனை படைத்துள்ளது.
மதிப்பீட்டு வாரத்தில், எஃப்சிஏ 501 கோடி டாலா் உயா்ந்து 55,353 கோடி டாலராக இருந்தது.
யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாறுபாடு ஏற்படுகிறது.
கணக்கீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 26 கோடி டாலா் அதிகரித்து 3,810 கோடி டாலராக இருந்தது.
அதேபோன்று, சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 20 லட்சம் டாலா் அதிகரித்து 151 கோடி டாலராகவும், நாட்டின் காப்பு நிதி 50 லட்சம் டாலா் உயா்ந்து 502 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அண்மையில் வெளியான நிதிக் கொள்கை அறிவிப்பில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 60,000 கோடி டாலரை தாண்டியிருக்கும் என ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேக் லைன்...
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 மே 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 527 கோடி டாலா் அதிகரித்து 59,816 கோடி டாலரை எட்டி புதிய சாதனை உச்சத்தை பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அனைவருக்கும் அரசு வேலை! நாம் தமிழர் தேர்தல் வாக்குறுதி

வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!

ரூ. 1 லட்சம் கோடி இழப்பு... ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் ராஜிநாமா எதிரொலி!

தில்லி கேபிடல்ஸுக்கு புதிய ஃபீல்டிங் பயிற்சியாளர் நியமனம்!
வீடியோக்கள்
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தினமணி வீடியோ செய்தி...

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

