உலகளவில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ், தனது துணை நிறுவனமான 'ஓப்போ'வுடன் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒன்பிளஸ், ஓப்போ ஆகிய இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாக செயல்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி இணைவதாக ஒன்பிளஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் தெரிவித்துள்ளார்.
ஒன்பிளஸ் மற்றும் ஓப்போ இரண்டிற்கான தயாரிப்புகளை மேம்படுத்தும் கூடுதல் பொறுப்புகளை, தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், இரண்டு நிறுவனங்களும் இணைவதன் மூலமாக பயனர்களுக்கு சிறந்த தரமான தயாரிப்புகளை வழங்க முடியும் என்றார்.
முன்னதாக ஓப்போவுடன் சில குழுக்களை ஒருங்கிணைத்ததன் நேர்மறை பலனைத் தொடர்ந்து இப்போது ஓப்போ உடன் எங்கள் நிறுவனத்தை ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
மேலும், ஒன்பிளஸ் பயனர்களுக்கு வேகமான, நிலையான மென்பொருள் புதுப்பிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் பிராண்ட் தொடர்ந்து தனியாகவும் செயல்படும், அவற்றில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹெச்.எஸ்.பி.சி. விதிமீறல்: ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!

நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம்

இந்த முறை கோப்பை மிஸ் ஆகாது; பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை!
எங்களுடன் பேச ஈரானில் தலைவர்கள்தான் இல்லை: டிரம்ப்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

