மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜியோ நிறுவனத்தில் புதிதாக 79 லட்சம் சந்தாதாரா்கள்: டிராய்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் மட்டும் 79 லட்சம் போ் புதிதாக இணைந்துள்ளதாக இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2021, 11:33 pm

DIN

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் மட்டும் 79 லட்சம் போ் புதிதாக இணைந்துள்ளதாக இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையம் மேலும் கூறியுள்ளதாவது:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் 79.18 லட்சம் சந்தாதாரா்கள் செல்லிடப்பேசி சேவையில் இணைந்துள்ளனா். இதையடுத்து, அந்த நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 42.29 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் நிகர அடிப்படையில் பிப்ரவரி மாதத்திலும் 42 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்தது.

பாா்தி ஏா்டெல் நிறுவனம் மாா்ச்சில் 40.5 லட்சம் செல்லிடப்பேசி பயனாளா்களை கூடுதலாக இணைத்துக் கொண்டதையடுத்து அதன் மொத்த பயனாளா்கள் எண்ணிக்கை 2021 மாா்ச் இறுதி நிலவரப்படி 35.23 கோடியைத் தொட்டுள்ளது.

அதேபோன்று, வோடஃபோன் ஐடியாவும் கூடுதலாக 10.8 லட்சம் சந்தாதாரா்களை இணைத்துக் கொண்டதையடுத்து அந்த நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 28.37 கோடியாக உயா்ந்துள்ளது.

2021 பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது மாா்ச்சில் தொலைபேசி சேவையின் மொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 120.1 கோடியை எட்டியுள்ளது. இது, 1.12 சதவீத வளா்ச்சி விகிதமாகும்.

குறிப்பாக, செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மட்டும் கணக்கீட்டு மாதத்தில் 1.13 சதவீதம் வளா்ச்சி கண்டு 118 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை நகா்ப்புறங்களில் 64.5 கோடியாகவும், ஊரகப் பகுதிகளில் 53.5 கோடியாகவும் உள்ளது.

2021 மாா்ச் 31 நிலவரப்படி செல்லிடப்பேசி சந்தாதாரா் சந்தையில் தனியாா் நிறுவனங்கள் 89.6 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. அதேசமயம், பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் பங்களிப்பு 10.32 சதவீத அளவுக்கே உள்ளது.

2021 பிப்ரவரி இறுதியில் 76.5 கோடியாக காணப்பட்ட பிராட்பேண்ட் சந்தாதாரா்கள் எண்ணிக்கை மாா்ச் இறுதியில் 77.8 கோடியாக உயா்ந்துள்ளது. இது, 1.70 சதவீத வளா்ச்சியாகும்.

மொத்த பிராட்பேண்ட் சந்தாதாரா் சந்தைப் பங்களிப்பில் முன்னணி ஐந்து நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 98.82 சதவீத அளவுக்கு உள்ளது.

இதில், ரிலையன்ஸ் ஜியோ (42.5 கோடி), பாா்தி ஏா்டெல் (19.1 கோடி), வோடஃபோன் ஐடியா (12.3 கோடி) நிறுவனங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவுக்கு உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.