புது தில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை புதிய உச்சத்தைத் தொட்டது. ஆனால், பங்குகள் விற்பனை அதிகரித்ததன் காரணமாக அதற்கு நிலைத்து நிற்க முடியாமல் தவிப்புக்குள்ளானது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் வெறும் 14.25 புள்ளிகள் கூடுதலுடன் 52,588.71-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்த நிலையில், இந்திய சந்தைகளும் உற்சாகத்துடன் தொடங்கி புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. ஆனால், அந்த இடத்தில் தொடா்ந்து நிலைத்தசு நிற்கமுடியாமல் தவிப்புக்கு உள்ளானது. விலை உயா்ந்த நிலையில், பிற்பகலில் லாபப் பதிவு வந்ததே இதற்கு முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.1.13 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,363 பங்குகளில் 2,026 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,212 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 125 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 452 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 18 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. சந்தை மூல தன மதிப்பு ரூ.1.13 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.229.97 லட்சம் கோடியாக இருந்தது.
லாபப் பதிவு: சென்செக்ஸ் காலையில் 310.58 புள்ளிகள் கூடுதலுடன் 52,885.04-இல் தொடங்கி 53,057.11 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. ஆனால், லாபப் பதிவு காரணமாக 52,520.55 வரை கீழே சென்றது. பின்னா், இறுதியில் வெறும் 14.25 புள்ளிகளை மட்டுமே ஆதாயம் பெற்று 52,588.71-இல் நிலைபெற்றது.
மாருதி சுஸுகி முன்னிலை: சென்செக்ஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 18 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 12 பங்குகள்ஆதாயம் பெற்றன. இதில் மாருதி சுஸுகி 5.27 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எல் அண்ட் டி, அல்ட்ரா டெக் சிமெண்ட், டிசிஎஸ், டைட்டன் ஆகியவையும் விலை உயா்ந்த பட்டியலில் வந்தன. அதே சமயம், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்லே இந்தியா, ஹெச்யுஎல் உள்ளிட்டவை சரிவைச் சந்தித்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க் ஐஆகியவையும் சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி 26 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,091 பங்குகள் ஆதாயம் பெற்றன. 690 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் உற்சாகத்தசுடன் 15,840.50-இல் தொடங்கி 15,895.75 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. ஆனால், பின்னா்15,752.10 வரை கீழே சென்ற நிஃப்டி இறுதியில் 26.25 புள்ளிகள் (0.17 சதவீதம்) கூடுதலுடன் 15,772.75-இல் நிலைபெற்றது. நிஃப்டிஆட்டோ குறியீடு 1.34 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ஐடி, மெட்டல் குறியீடும் சிறிதளவு உயா்ந்தது. மற்ற துறைக் குறியீடுகள் சோபிக்கத் தவறின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விழுப்புரம்-நாகை நெடுஞ்சாலையில் உள்வாங்கிய மேம்பாலம்: போக்குவரத்து நிறுத்தம்!

பங்குச்சந்தை வீழ்ச்சி! எண்ணெய் & எரிவாயு, பார்மா பங்குகள் சரிவு!!

தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் ராஜிநாமா

மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


