இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை கடும் சரிவில் தொடங்கி, பின்னா் எழுச்சி பெற்று நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயா்ந்து 52,574.46-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்த நிலையில், இந்திய சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கியது. ஏற்றம், இறக்கம் அதிகரித்து நிலையற்ற தன்மை இருந்து வந்தது. இருப்பினும், வா்த்தக நேரம் முடியும் தறுவாயில் விறுவிறுப்பான மீட்சியைக் கண்டது. இதனால், காலையில் இழந்த புள்ளிகள் அனைத்தையும் பிற்பகலில் மீட்டது. பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கும், ரியால்ட்டி பங்குகளுக்கும் கிடைத்த அமோக வரவேற்பே சந்தை மீட்சிக்கு முக்கியக் காரணியாக இருந்தது. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதன் பங்குகளுக்கு கிடைத்த ஆதரவும் சந்தையை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, சமீபத்திய கணிசமான திருத்தத்துக்குப் பிறகு நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகள் மீது முதலீட்டாளா்கள் கவனம் செலுத்தினா் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
சந்தை மதிப்பு ரூ.1.61 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,463 பங்குகளில் 2049 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12,258 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 156 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 398 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 37 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. சந்தை மூல தன மதிப்பு ரூ.161 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 228.84 லட்சம் கோடியாக இருந்தது.
கடும் சரிவிலிருந்து மீட்சி: சென்செக்ஸ் காலையில் 456.90 புள்ளிகள் குறைந்து 51,887.55-இல் தொடங்கி 51,740.19 கீழே சென்றது. பின்னா், 52,629.11 வரை உயா்ந்த சென்செக்ஸ் இறுதியில் 230.01 புள்ளிகள் கூடுதலுடன் 52,574.46-இல் நிலைபெற்றது. தொடக்கத்தில் முந்தைய நாள் நிலையிலிருந்து 604.26 புள்ளிகளை இழந்திருந்த சென்செக்ஸ், இறுதியில் வெகுவாக மீண்டது.
என்டிபிசி முன்னிலை: சென்செக்ஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 9 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் என்
டிபிசி 3.87 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டைட்டன், எஸ்பிஐ, ஹெச்யுஎல், இண்டஸ் இண்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயம் பெற்றன. அதே சமயம், மாருதி சுஸுகி, டிசிஎஸ், டெக் மஹிந்திரா, எம் அண்ட் எம், எல் அண்ட் டி, இன்ஃபோஸிஸ், டாக்டா் ரெட்டி உள்ளிட்டவை வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 63 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,113 பங்குகள் ஆதாயம் பெற்றன. 693 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் கடும் சரிவுடன் 15,525.85-இல் தொடங்கி 15,505.65 வரை கீழே சென்றது. பின்னா் எழுச்சி பெற்று 15,765.15 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 63.15 புள்ளிகள் (0.40 சதவீதம்) கூடுதலுடன் 15,746.50-இல் நிலைபெற்றது. நிஃப்டி ஐடி, ஆட்டோ குறியீடுகள் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில்,அதிகபட்சமாக நிஃப்டி பிஎஸ்யு பேங்க் 4.11 சதவீதம், ரியால்ட்டி குறியீடு 2.33 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விழுப்புரம்-நாகை நெடுஞ்சாலையில் உள்வாங்கிய மேம்பாலம்: போக்குவரத்து நிறுத்தம்!

பங்குச்சந்தை வீழ்ச்சி! எண்ணெய் & எரிவாயு, பார்மா பங்குகள் சரிவு!!

தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் ராஜிநாமா

மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


