விரைவில் அறிமுகமாகிறது ‘மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 11’

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆறு வருடத்திற்கு பிறகு தனது ‘விண்டோஸ் 11’ இயங்குதளத்தை(ஓ.எஸ்) அறிமுகம் செய்யவுள்ளது.
விரைவில் அறிமுகமாகிறது ‘மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 11’

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆறு வருடத்திற்கு பிறகு தனது ‘விண்டோஸ் 11’ இயங்குதளத்தை(ஓ.எஸ்) அறிமுகம் செய்யவுள்ளது.

பல நாள்களாக விண்டோஸ் 11 விரைவில் அறிமுகமாகவுள்ளது என்ற தகவல் பரவி வந்த நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதை உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி பனோஸ் பனாய் கூறியதாவது,

புதிதாக அறிமுகப்படுத்துள்ள  விண்டோஸ் 11 இயங்குதளத்தை முந்தைய விண்டோஸ் 10 பயனர்கள் இலவசமாக மேம்படுத்திக் கொள்ளலாம். புதிய இயங்குதளத்தில் பயனர்கள் எளிதில் உபயோகிக்கும் வகையில் அழகாகவும், புதுமையாகவும் இருக்கும். 

இந்த இயங்குதளத்தில், ஸ்டார்ட் பட்டன், டாஸ்க் பார் உள்ளிட்டவை எளிதில் உபயோகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்டோஸ் 11 இயங்குதளத்தில், வன்பொருள் தனது முழு திறனையும் செயல்படும் வகையில், கேமிங் தொழில்நுட்பத்திற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக டாஸ்க் பாரில் சாட் பாக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், எளிதாக மெசேஜ், விடியோ கால், ஆடியோ கால் உள்ளிட்டவை எளிதாக செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com