புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் நிறைவு

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஜூன் 28) பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 189 வரை சரிந்தது.

News image
பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் நிறைவு
Updated On :28 ஜூன் 2021, 10:42 am

DIN

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஜூன் 28) பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 189 வரை சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 189.45 புள்ளிகள் சரிந்து 52,735.59 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில்  0.36 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 45.65  புள்ளிகள் சரிந்து 14,617.85 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.29 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியல் உள்ள முதல் 30 தர பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் முடிவடைந்தது. ஏனைய 20 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

அதிக பட்சமாக டைட்டன் கம்பெனி 1.56 சதவிகிதமும், டிசிஎஸ் 1.33 சதவிகிதமும், எச்.சி.எல். டெக் 1 சதவிகிதமும், பஜாஜ் பின்சர்வ் 0.87 சதவிகிதமும் சரிவுடன் காணப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.