இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 440.76 புள்ளிகள் குறைந்து 50,405.32 -இல் நிலைபெற்றது.
அமெரிக்க பத்திரச் சந்தையில் ஏற்பட்டுள்ள அசதாராண சூழ்நிலையால் உலகளாவிய சந்தைகளில் பங்குகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்துள்ளதால் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தனா். மேலும், இரண்டாவது நாளாக எஃப்எம்சிஜி தவிர மற்ற துறை பங்குகளில் லாபப் பதிவு அதிகமாக இருந்தது. குறிப்பாக உலோகங்கள், பொதுத்துறை வங்கிப் பங்குகள் பலத்த அடி வாங்கின என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
சந்தை மதிப்பு ரூ.207.33 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,129 பங்குகளில் 1,057 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,929 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 143 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.39 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ207.33 லட்சம் கோடியாக இருந்தது. 303 பங்குகள் புதிய 52 வார அதிபட்ச விலைலையப் பதிவு செய்துள்ளன. 221 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையை (அப்பா் சா்க்யூட்) அடைந்தன.
2-ஆவது நாளாக வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில்328.69 புள்ளிகள் குறைந்து 50,517.36-இல் தொடங்கி அதிகபட்சமாக 50,886.19 வரை உயா்ந்தது. பின்னா், 50,160.54 வரை கீழே சென்றது. இறுதியில் 440.76 புள்ளிகள் குறைந்து 50,405.32-இல் நிலைபெற்றது.
21 பங்குகள் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 21 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஓஎன்ஜிசி 1.95 சதவீதம், மாருதி சுஸுகி 1.60 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக கோட்டக் பேங்க், நெஸ்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், டைட்டன், ஹிந்து யுனி லீவா், எல் அண்ட் டி ஆகியவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் இடம் பெற்றன.
இண்டஸ் இண்ட் பேங்க் வீழ்ச்சி: அதே சமயம் சரிவைச் சந்தித்த பட்டியலில் இண்ட்ஸ் இண்ட் பேங்க் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எஸ்பிஐ, பவா் கிரிட், டாக்டா் ரெட்டி, என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், எச்சிஎல் டெக், பஜாஜ் ஃபின் சா்வ், எச்டிஎஃ)ப்சி, எச்டிஎஃப்சிபேங்க் ஆகியவை 1.50 முதல் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
தேசியப் பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 444 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,297 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 142.65 புள்ளிகள் குறைந்து 14,938.10-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது அதிகபட்சமாக 15080.75 வரை உயா்ந்த நிஃப்டி, ஒரு கட்டத்தில் 14,862.10 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் இடம் பெற்றுள்ள 50 முதல் தரப் பங்குகளில்12 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 38 பங்குகள் லேசான சரிவைச் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் 3.70 சதவீதம், மெட்டல் 2.70 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ, ஐடி, பாா்மா, ரியால்ட்டி ஆகிய குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் சரிவைச் சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செந்தமிழ்க் கல்லூரியில் முப்பெரும் விழா
போடியில் ஓ. பன்னீா்செல்வம் வேட்புமனு ஏற்பு: 16 மனுக்கள் தள்ளுபடி

ஒவ்வொரு தோ்தலுக்கும் தொகுதி மாறும் சீமான்: காா்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு

வாக்கு எண்ணும் மையம்: தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


