ஒன்-பிளஸ் 9 சீரிஸில் வெளியாகும் ஸ்மார்ட் போன்கள் 2 ஆண்டுகள் உத்திரவாதத்துடன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒன்-பிளஸ் 9, ஒன்-பிளஸ் 9 லைட், ஒன்-பிளஸ் 9 ப்ரோ ஆகியவை இரண்டு ஆண்டுகள் உத்திரவாதத்துடன் மார்ச் 23-ம் தேதி வெளியாகிறது.
சீனாவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒன்-பிளஸ் நிறுவனத்தின் செல்போன்கள் இந்திய சந்தைகளில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
அந்தவகையில் ஒன்-பிளஸ் 9 சீரிஸில் வெளியாகும் செல்போன்கள் 2 ஆண்டுகள் நீடித்த உத்தரவாதத்துடன் வெளியாகும் என்று அதன் தலைமை செயல் அதிகாரி பிடே லாவ் தெரிவித்துள்ளார்.
ஒன்-பிளஸ் 9 சீரிஸ் செல்போன்கள் 65W வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் வெளியாகிறது. ஒன்-பிளஸ் 9 மற்றும் ஒன்-பிளஸ் 9 ப்ரோ ஆகியவை 4,500 mAh பேட்டரி அம்சத்துடன் சந்தைக்கு வருகிறது.
ஒன்-பிளஸ் 9 லைட் ஸ்மார்ட்போன், இதற்கு முந்தையை ஒன்-பிளஸ் 8T சிறப்பம்சங்களை ஒத்துள்ளது. எனினும் இதில் 65W வார்ப் சார்ஜிங் அம்சம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
ஒன்-பிளஸ் 9 லைட் ஸ்னாப்டிராகன் 865 உடனும், ஒன்-பிளஸ் 9 மற்றும் 9 ப்ரோ ஆகியவை ஸ்னாப்டிராகன் 888 உடன் வருகிறது. இவை 8GB RAM மற்றும் 128 உள்ளக நினைவகத்தையும், கொண்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எதிர்நீச்சல் -2 தொடரில் கனிகாவுக்கு பதிலாக இவர்தான்!

ஐபிஎல் 2026: ஹேசில்வுட் பங்கேற்பதில் சிக்கல்! ஆர்சிபிக்கு பின்னடைவு?

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!

தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

