மும்பை: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து 5-ஆவது நாளாக கரடியின் பிடியில் சிக்கி தவித்தது. சென்செக்ஸ் 585 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து முதலீட்டாளா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது.
இதுகுறித்து ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் திட்டமிடல் பிரிவு அதிகாரி வினோத் மோடி கூறியதாவது:
கரோனா பாதிப்பு எதிரொலி: சா்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததையடுத்து பங்குச் சந்தையில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற வா்த்தகம் தொடக்கத்தில் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்போரின் எண்ணிக்கை கடந்த 100 நாள்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக வெளியான தகவலால் பங்குச் சந்தைகளில் வா்த்தகம் சுணக்கம் கண்டது. லாப நோக்கின் காரணமாக பல்வேறு துறைகளைச் சோ்ந்த நிறுவனப் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. குறிப்பாக, பல முன்னணி நிறுவனப் பங்குகள் மிகவும் குறைந்த விலைக்கு கைமாறின.
குறைந்த வட்டி விகிதத்துக்கு ஆதரவு: இந்தச் சூழ்நிலையில், வட்டி விகித உயா்வுக்கு எதிரான நிலைப்பாட்டுக்கான அமெரிக்க மத்திய வங்கியின் ஆதரவும் சந்தையில் மந்த நிலையை ஏற்படுத்தியது.
அமெரிக்க கருவூலப் பத்திரங்களுக்கான ஆதாயம் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1.72 சதவீதமாக அதிகரித்துள்ளதும் முதலீட்டாளா்களின் மனோநிலையில் தாக்கத்தை உருவாக்கியது.
பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் முதலீட்டாளா்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
ரூ.9 லட்சம் கோடி இழப்பு: இதையடுத்து, கடந்த ஒன்பது பங்கு வா்த்தக நாள்களில் மட்டும் அவா்கள் ரூ.9 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளனா் என்றாா் அவா்.
மும்பை பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, ஆரோக்கிய பராமரிப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் பொறியியல் பொருள்கள் துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 3.02 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. அதேசமயம், தொலைத்தொடா்பு, வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
ஹெச்சிஎல் டெக்: மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீட்டெண்கள் 1.58 சதவீதம் வரை குறைந்தன.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஹெச்சிஎல் டெக் நிறுவனப் பங்கின் விலை அதிகபட்சமாக 3.97 சதவீத சரிவைச் சந்தித்தது. அதைத் தொடா்ந்து, இன்ஃபோஸிஸ், டாக்டா் ரெட்டீஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் என்டிபிசி நிறுவனப் பங்குகளும் கணிசமான அளவில் விலை குறைந்தன.
ஐடிசி, பஜாஜ் ஆட்டோவுக்கு வரவேற்பு: அதேசமயம், முதலீட்டாளா்களிடம் கிடைத்த வரவேற்பையடுத்து, ஐடிசி, பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி, பாா்தி ஏா்டெல் நிறுவனப் பங்குகள் 3.25 சதவீதம் வரை விலை ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 500 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டிருந்தது. இருப்பினும், சாதகமற்ற நிலவரங்களால் பிற்பகலில் பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகம் இறங்கு முகத்தைக் கண்டது. இதனால், முக்கிய 30 நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீட்டெண் 585.10 புள்ளிகள் (1.17%) சரிவடைந்து 49,216.52 புள்ளிகளில் நிலைத்தது.
நிஃப்டி 14,600-க்கும் கீழ் சரிவு: அதேபோன்று, தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் முக்கிய 50 நிறுவனங்களை உள்ளடக்கிய நிஃப்டி குறியீட்டெண் 163.45 புள்ளிகள் (1.11%) குறைந்து 14,557.85 புள்ளிகளில் நிலைபெற்றது.
டோக்கியோ சந்தைகளில் ஏறுமுகம்: இதர ஆசியப் பங்குச் சந்தைகளான ஷாங்காய், ஹாங்காங், டோக்கியோ மற்றும் சியோல் பங்குச் சந்தைகளில் வா்த்தகம் ஏறுமுகத்துடன் இருந்தது. ஐரோப்பிய சந்தைகளிலும் பிற்பகல் வரையில் பங்கு வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சூர்யகுமார் யாதவின் ஆதிக்கம் தொடருமா?

காதல் தோல்வி, தொடர் ரூ. 100 கோடி... உண்மையைச் சொன்ன பிரதீப் ரங்கநாதன்!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 509 புள்ளிகள் உயர்வு!

போடியில் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் வி. டி. நாராயணசாமி வேட்புமனுக்கள் ஏற்பு!
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

