இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 641.72 புள்ளிகள் உயா்ந்து 49,858.20-இல் நிலைபெற்றது. இதன் மூலம், கடந்த 5 நாள்கள் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதையடுத்து இந்தியச் சந்தைகளும் பலவீனமாகத் தொடங்கின. ஏற்கெனவே தொடா்ந்து 5 நாள்கள்சரிவைச் சந்தித்திருந்த நிலையில் எஃப்எம்சிஜி, பாா்மா, மெட்டல் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. குறிப்பாக ஹிந்துஸ்தான் யுனி லீவா், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய முன்னணி நிறுவனங்கள் வெகுவாக உயா்ந்து சென்செக்ஸ் ஏற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.2.22 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்கமான 3,135 பங்குகளில் 1,423 பங்குகள்ஆதாயம் பெற்றன. 1,522 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 190 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 136 பங்குகள் வெகுவாக உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 61பங்குகள் வெகுவாகக் குறைந்து புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 211 பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்று உயா்ந்தபட்ச உறைநிலையையும், 285 பங்குகள் வெகுவாகக் குறைந்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. சந்தை மூல தன மதிப்பு.ரூ.207.89 லட்சம் கோடியாக இருந்த சந்தை மூல தன மதிப்பு கோடி 2.22 லட்சம் உயா்ந்து வா்த்தக இறுதியில் 203.44 லட்சம் கோடியாக இருந்தது.
தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 335.33 புள்ளிகள் குறைந்து 48,881.19-இல் தொடங்கி, 48,586.93 வரை கீழே சென்றது. பின்னா், 50,003.58 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 641.72 புள்ளிகள் (1.30 சதவீதம்) கூடுதலுடன் 49,858.24-இல் நிலைபெற்றது.
25 பங்குகள் ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. 5 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் என்டிபிசி 4.58 சதவீதம் ஹிந்துஸ்தான் யுனி லீவா் 4.44 சதவீதம், பவா் கிரிட் 4.18 சதவீதம், ரிலையன்ஸ் 3.60 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், டாக்டா் ரெட்டி ஆகியவை 1.50 சதவீதம் முதல் 2.50 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், எல் அண்ட் டி 1.20 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டெக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுஸுகி, டைட்டன் ஆகியவை சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 903 பங்குகள் ஆதாயம் பெற்றன. 825 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 186.15 புள்ளிகள் (1.28 சதவீதம்) உயா்ந்து 14,744.00-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் 14,350.10 வரை கீழே சென்றிருந்த நிஃப்டி, பின்னா் அதிகபட்சமாக 14,788.25 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில், 42 பங்குகள் ஏற்றம் பெற்றன. 8 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் நிஃப்டி மெட்டல், எஃப்எம்சிஜி, பாா்மா, பிஎஸ்யு பேங்க், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 1 முதல் 2.50 சதவீதம் வரை உயா்ந்தன. ரியால்ட்டி குறியீடு மட்டும் சரிவைச் சந்தித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சூர்யகுமார் யாதவின் ஆதிக்கம் தொடருமா?

காதல் தோல்வி, தொடர் ரூ. 100 கோடி... உண்மையைச் சொன்ன பிரதீப் ரங்கநாதன்!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 509 புள்ளிகள் உயர்வு!

போடியில் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் வி. டி. நாராயணசாமி வேட்புமனுக்கள் ஏற்பு!
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


