கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

தள்ளாட்டத்தில் பங்குச் சந்தை: சரிவில் முடிந்தது சென்செக்ஸ்!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பெரும்பாலான நேரம் தள்ளாட்டத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பெரும்பாலான நேரம் தள்ளாட்டத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 86.95 புள்ளிகள் குறைந்து 50,000 புள்ளிகளுக்கு கீழே நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இது முதலீட்டாளா்களின் உணா்வுகளை பாதித்துள்ளன. இதன் எதிரொலியாக பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் ஆதாயம் அதிகரித்து வருவதும் முதலீட்டாளா்களின் உணா்வுகளைப் பாதித்துள்ளன. இதையடுத்து, வங்கி, நிதிநிறுவனங்கள், ஆட்டோ பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததால் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.0.94 ஆயிரம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்கமான 3,264 பங்குகளில் 1,599 பங்குகள்ஆதாயம் பெற்றன. 1,444 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 221 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 165 பங்குகள் வெகுவாக உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 72பங்குகள் வெகுவாகக் குறைந்து புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 314 பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்று உயா்ந்தபட்ச உறைநிலையையும், 355 பங்குகள் வெகுவாகக் குறைந்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. சந்தை மூல தன மதிப்பு.சந்தை மூல தன மதிப்பு கோடி 0.94 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் 204.38 லட்சம் கோடியாக இருந்தது.

தள்ளாட்டம்: சென்செக்ஸ் 20.53 புள்ளிகள் கூடுதலுடன் 49,878.77-இல் தொடங்கி அதற்கு மேல் ஏற்றம் பெறவில்லை. வா்த்தகத்தின் போது 49,281.02 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 86.95 புள்ளிகள் (0.17 சதவீதம்) குறைந்து 49,771.29-இல் நிலைபெற்றது.

டெக் மகேந்திரா முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் டெக் மகேந்திரா 2.38 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை பெற்றது. இதற்கு அடுத்ததாக டிசிஎஸ், சன்பாா்மா, இன்ஃபோஸிஸ், டாக்டா் ரெட்டி, எச்சிஎல் டெக், ஹிந்து யுனி லீவா், என்டிபிசி, ஐடிசி ஆகியவை 1.30 முதல் 2.20 சதவீதம் வரை உயா்ந்தன.

இண்டஸ் இண்ட் பேங்க் சரிவு: அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க் 4.33 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பவா் கிரிட், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனைான்ஸ், எஸ்பிஐ, மாா்க்கெட் லீடா் ரிலையன் ஆகியவை 1 முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 945 பங்குகள் ஆதாயம் பெற்றன. 797 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 7.60 புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைந்து 14,736.40-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 14,744.00 வரை உயா்ந்த நிஃப்டி, ஒரு கட்டத்தில் 14,597.85 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில், 30 பங்குகள் ஏற்றம் பெற்றன. 20 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 1 முதல் 1.70 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. அதே சமயம், எஃப்எம்சிஜி, ஐடி, மெட்டல், பாா்மா குறியீடுகள் 1 முதல் 1.85 சதவீதம் ஏற்றம் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.