டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பெட்ரோல் விலை 2-வது நாளாக சரிவு

சென்னையில் பெட்ரோல் விலை இன்று இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது 18 காசுகள் குறைந்து இன்று (மார்ச் 25) ஒரு லிட்டர் ரூ.92.77-க்கு விற்பனையாகிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:50 pm

DIN

சென்னையில் பெட்ரோல் விலை இன்று இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது 18 காசுகள் குறைந்து இன்று (மார்ச் 25) ஒரு லிட்டர் ரூ.92.77-க்கு விற்பனையாகிறது.

இதேபோன்று டீசல் விலையும் 19 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ. 86.10-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை அவ்வபோது மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது. அதன்படி மாநிலங்களில் எரிபொருள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்தவகையில், கடந்த மாதம் படிப்படியாக உயர்ந்து வந்த பெட்ரோல் விலை, சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதன் பிறகு தமிழகத்தில் மாற்றமில்லாமல் இருந்தது.

இதனிடையே நேற்று பெட்ரோல் விலை சற்று குறைந்தது. அதனைத் தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது. 

பெட்ரோல் விலை 18 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.92.77 காசுகளுக்கும், டீசல் விலை 19 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.86.10 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பெட்ரோல் விலை தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.