பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடக்கம்

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (மார்ச் 30) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 385 புள்ளிகள் வரை உயர்ந்தது.

News image
கோப்புப்படம்
Updated On :30 மார்ச் 2021, 5:06 am

DIN

வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (மார்ச் 30) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 385 புள்ளிகள் வரை உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 385 புள்ளிகள் உயர்ந்து 49,800.95 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. இது மொத்த வர்த்தகத்தில் இது 1.62 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 131 புள்ளிகள் உய்ர்ந்து 14,638 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 1.68 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல்தர பங்குகளில், 28 நிறுவனங்களின் பங்குகள் நேர்மறையாக இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கின.

அதிகபட்சமாக என்.டி.பி.சி. 3.89 சதவிகிதமும், ஓ.என்.ஜி.சி. 3.42 சதவிகிதமும், டைட்டன் கம்பெனி 3.17 சதவிகிதமும், எச்.டி.எஃப்.சி. 2.51 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.

மாருது சுசூகி மற்றும் எம் & எம் நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே சென்செக்ஸ் பட்டியலில் சரிந்து காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.