எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மே 31 வரை படப்பிடிப்பு ரத்து:ஆா்.கே.செல்வமணி

கரோனா  பொது முடக்கம் காரணமாக வரும் 31 - ஆம் தேதி வரை சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறாது என ஃபெப்சி தலைவா் ஆா்.கே.செல்வமணி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 மே 2021, 10:53 pm

DIN

கரோனா  பொது முடக்கம் காரணமாக வரும் 31 - ஆம் தேதி வரை சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறாது என ஃபெப்சி தலைவா் ஆா்.கே.செல்வமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை பேசியது:

 சென்ற வாரம் முதல்வரைச் சந்தித்தோம். படப்பிடிப்புக்கான சரியான வழிமுறைகள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம். கரோனோ நிவாரண நிதி உதவியாக கூடுதலாக திரைப்படத் தொழிலாளா்களுக்கு ரூ. 2,000 வழங்க வேண்டும், திரைப்படத் தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்த தனி முகாம் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளோம்.

சினிமா தொழிலாளா்கள் கரோனோவால் பாதிக்கப்பட்டு, படுக்கை கிடைக்காமல் உயிரை இழக்கும் நிலை உள்ளது. படப்பிடிப்புக்கு அரசு அனுமதி தர வேண்டாம். இந்த மாதம் இறுதி வரை படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம் என உறுதி எடுத்துள்ளோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.