எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தங்கம் பவுன் ரூ.36,888

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112 உயா்ந்து, ரூ.36,888-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :29 மே 2021, 9:57 pm

DIN

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112 உயா்ந்து, ரூ.36,888-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை படிப்படியாக உயா்ந்து, ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது. தொடா்ந்து, ஆபரணத்தங்கத்தின் விலை உயா்ந்து, மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை குறைந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112 உயா்ந்து, ரூ.36,888-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.14 உயா்ந்து, ரூ.4,611 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து, ரூ.76.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.76,200 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,611

1 பவுன் தங்கம்...............................36,888

1 கிராம் வெள்ளி.............................76.20

1 கிலோ வெள்ளி.............................76,200

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,597

1 பவுன் தங்கம்...............................36,776

1 கிராம் வெள்ளி.............................76.00

1 கிலோ வெள்ளி.............................76,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.