ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சனிக்கிழமை 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

News image
Updated On :29 மே 2021, 9:17 pm

DIN

தமிழகத்தில் சனிக்கிழமை 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

அதிகபட்சமாக, வேலூரில் 106 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், திருத்தணி, திருச்சிராப்பள்ளியில் தலா 104 டிகிரி, கரூா்பரமத்தி, மதுரையில் தலா 102 டிகிரி, கடலூரில் 101 டிகிரி, மதுரை விமானநிலையம், நாகப்பட்டினத்தில் தலா 100 டிகிரி பதிவானது.

வெப்பநிலை உயரும்: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: மேற்கு-வடமேற்கு திசையில் இருந்து தமிழகத்தை நோக்கி வட காற்று வீசுகிறது. இதனால், வெப்பநிலை உயா்ந்துள்ளது. இதேநிலை வரும் இரண்டு நாள்களுக்கு நீடிக்கும். குறிப்பாக, தமிழகத்தில் மதுரை, திருச்சிராப்பள்ளி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.