இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளின் தடை குறித்து மசோதா தாக்கல் செய்யப்படும் நிலையில் அதன் சந்தை மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
கிரிப்டோகரன்சி எனப்படும் ’விர்சுவல் வணிகம்’ உலகம் முழுவதும் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. அடையாளம் தெரியாத நபர்களால் உருவாக்கப்பட்ட இந்த கரன்சிகள் இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவிலும் பெரிய அளவில் அறிமுகமாகி அதிக முதலீடுகளைப் பெறத் தொடங்கியது.
இதையும் படிக்க | கிரிப்டோகரன்சிகளுக்கு தடை; முழு பின்னணி என்ன?
நாட்டில் 1.5 கோடி பேர் பல நாணயங்களிலும் பிட்காயின் போன்றவற்றிலும் கிட்டத்தட்ட 10,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் வரும் நவ.29 அன்று பிரதமர் மோடி கிரிப்டோகரன்சிகள் மீதான தடைகுறித்த மசோதாவைத் தாக்கல் செய்யும் நிலையில் கிரிப்டோகரன்சி பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நேற்று இரவு அறிவிப்பு வந்ததும் 15 சதவீதம் வரை பங்குகளின் விலை சரியத் தொடங்கியது.
பலரும் பதற்த்தில் கடுமையான நஷ்டத்திலேயே தங்கள் முதலீடுகளை விற்ற நிலையில் 48 லட்சம் வரை விற்ற பிட்காயின் விலை ஒரே நாளில் 33 லட்சம் வரை கீழ் இறங்கி தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
இதேபோல ஒவ்வொரு கிரிப்டோகரன்சிகளின் விலையும் முன் எப்போதும் இல்லாத சரிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால் முதலீட்டாளர்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
இருப்பினும் இந்தியாவில் கிரிப்டோ வணிகத்தை ஒருங்கிணைக்கும் செயலிகள் தங்களுடைய முதலீட்டாளர்களிடம் யாரும் பதற்றத்தில் முதலீடுகளை விற்க வேண்டாம் என அறிவுரை வழங்கி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


