இன்ஸ்டாகிராம் பதிவுகளை பயனர்கள் இனி தங்களது கணினியிலும் பதிவிடுவதற்கான வசதியை இன்ஸ்டாகிராம் செயலி அறிமுகப்படுத்துகிறது.
உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருக்கிறது இன்ஸ்டாகிராம் செயலி. சமூக வலைத்தள பயன்பாட்டில் இன்ஸ்டாகிராம் பிரபலமான ஒன்றாக உள்ளது. பயனர்களின் தேவைகளுக்காக அவ்வப்போது இந்த செயலியில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | நேபாளத்தில் கனமழை பாதிப்பு: பலி எண்ணிக்கை 48ஆக உயர்வு
இந்நிலையில் பயனர்கள் தேவைக்கேற்ப கணினியில் தங்களது பதிவுகளை பதிவிடுவதற்கான வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தது. இதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்த சேவையை நாளை முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்களின் வசதிக்கேற்ற வகையில் புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அசுர வளர்ச்சியில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம்
நிதிகோரும் பதிவுகளுக்காக நிதிதிரட்டல் வசதியை இணைத்துள்ளதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. அதேபோல் பதிவுகளைப் பதிவிடும்போது இதரப் பயனர்களை டேக் செய்வதை அவரை பிந்தொடர்பவர்களுக்கும் தெரிவிக்கும் வசதியும் அறிமுகமாக உள்ளதாகவும் இதன்மூலம் குறிப்பிட்ட அந்தப் பதிவு பலரையும் சென்றடைவது எளிமையாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக இன்ஸ்டாகிராம் செயலியை கணினியில் பயன்படுத்தும்போது கூகுள் உள்ளிட்ட தேடுபொறியில் இன்ஸ்டாகிராமை இணைப்பதன் மூலமே பதிவுகளை பதிவிட முடிந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!

மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்!

கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி

உயர் பதவி காத்திருக்கு மகர ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

