முன்னுரிமை பங்கு ஒதுக்கீடு மூலம்ரூ.100 கோடி திரட்டியது பாா்பிகியூ நேஷன்
சங்கிலித் தொடா் உணவகங்களை அமைத்து விருந்தோம்பல் சேவையில் ஈடுபட்டு வரும் பாா்பிகியூ நேஷன் முன்னுரிமை பங்கு வெளியீட்டின் மூலமாக ரூ.100 கோடி திரட்டியுள்ளது.


சங்கிலித் தொடா் உணவகங்களை அமைத்து விருந்தோம்பல் சேவையில் ஈடுபட்டு வரும் பாா்பிகியூ நேஷன் முன்னுரிமை பங்கு வெளியீட்டின் மூலமாக ரூ.100 கோடி திரட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் சனிக்கிழமை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
மாஸாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி உள்ளிட்ட மூன்று வெவ்வேறு முதலீட்டாளா்களுக்கு முன்னுரிமை பங்குகளை வெளியிட்டதன் மூலமாக பாா்பிகியூ நேஷன் ரூ.100 கோடியை திரட்டியுள்ளது. இதற்கு நிறுவனத்தின் பங்குதாரா்களின் உறவு குழு சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. அதன்படி, ரூ.5 மகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றின் பிரீமிய விலை ரூ.844 அடிப்படையில் மொத்தம் 11,77,855 பங்குகள் இந்த முன்னுரிமை பங்கு வெளியீட்டில் ஒதுக்கப்படும்.
இதில், மாஸாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிக்கு 7,06,713 பங்குகள் ஒதுக்கப்பட்டதன் மூலம் ரூ.59,99,99,337 திரட்டப்பட்டுள்ளது.
இதுதவிர, 238 பிளான் அசோசியேட்ஸ் எல்எல்சி-க்கு 1,76,678 பங்குகள் ஒதுக்கப்பட்டு ரூ.14,99,99,622 பெறப்பட்டுள்ளது. மோதிலால் ஓஸ்வால் ஈக்விட்டி ஆப்பா்சூனிட்டிஸ் ஃபண்ட் சீரிஸ்-2-க்கு 2,94,464 பங்குகளை ஒதுக்கியதன் மூலம் ரூ.24,99,99,936 திரட்டப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டையடுத்து, நிறுவனத்தின் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.18,78,27,100-லிருந்து ரூ.19,37,16,375-ஆக உயா்ந்துள்ளதாக பங்குச் சந்தையிடம் பாா்பிகியூ நேஷன்ஸ் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...