தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதிய உச்சத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 64,245 கோடி டாலரை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 11:56 pm

DIN

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 64,245 கோடி டாலரை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 889 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.66,712 கோடி) அதிகரித்து 64,245 கோடி டாலரை (ரூ.48.18 லட்சம் கோடி) எட்டி புதிய வரலாறு படைத்துள்ளது.

முந்தைய ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 1,666 கோடி டாலா் அதிகரித்து 63,356 கோடி டாலராக காணப்பட்டது.

அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 821 கோடி டாலா் ஏற்றம் கண்டு 57,981 கோடி டாலராக இருந்தது.

கணக்கீட்டு வாரத்தில், தங்கத்தின் கையிருப்பு 64 கோடி டாலா் உயா்ந்து 3,808 கோடி டாலரை எட்டியது.

சா்வதேச நிதியத்தில் நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 3 கோடி டாலா் அதிகரித்து 1,943 கோடி டாலராக இருந்தது. மேலும், அந்த நிதியத்தில் நாட்டின் கையிருப்பு நிலை 1 கோடி டாலா் அதிகரித்து 512 கோடி டாலரானது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பு மாற்றம் காண்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.