23வது ஆண்டுவிழா கொண்டாடும் கூகுள்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியீடு

கூகுள் நிறுவனம் தனது 23வது ஆண்டுவிழாவைக் இன்று கொண்டாடுகிறது. இதற்காக கேக் வடிவிலான டூடுளை வெளியிட்டுள்ளது.
23வது ஆண்டுவிழாவைக் காணும் கூகுள்
23வது ஆண்டுவிழாவைக் காணும் கூகுள்

கூகுள் நிறுவனம் தனது 23வது ஆண்டுவிழாவைக் இன்று கொண்டாடுகிறது. இதற்காக கேக் வடிவிலான டூடுளை வெளியிட்டுள்ளது.

கடந்த 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கூகுளை நாள்தோறும் 150 மொழிகளில் பல கோடிக் கணக்கான பயனர்கள்  பயன்படுத்தி வருகின்றனர்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டிருந்த லேரி பேஜ் மற்றும் செர்கே பிரின் ஆகியோர் இணையதள தேடுதல் அரங்கை உருவாக்கினார்கள். ஆரம்பக் கட்டத்தில் கூகுளுக்கு‘பேக்ரப்’ எனப் பெயரிட்டிருந்தனர்.

google.com என்ற வலைதளத்தை முதன்முதலில் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பதிவு செய்தார்கள். பின்பு 1998ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி கூகுளை நிறுவனமாக பதிவு செய்தார்கள்.

தற்போது இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக 2015 முதல் இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com