வீல்ஸ் இந்தியா: நிகர லாபம் 186% அதிகரிப்பு

வீல்ஸ் இந்தியா: நிகர லாபம் 186% அதிகரிப்பு

உருக்கு சக்கரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வீல்ஸ் இந்தியா நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ஈட்டிய லாபம் 186 சதவீதம் அதிகரித்துள்ளது.
Published on

உருக்கு சக்கரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் வீல்ஸ் இந்தியா நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ஈட்டிய லாபம் 186 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.911.2 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய வருமானம் ரூ.510.9 கோடியுடன் ஒப்பிடுகையில் 78 சதவீதம் அதிகமாகும்.

நிகர லாபம் ரூ.7.4 கோடியிலிருந்து 186 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.21.2 கோடியைத் தொட்டது.

கட்டுமான உபகரணங்கள் மற்றும் காற்றாலை பிரிவுகளில் உலகளாவிய தேவையை பூா்த்தி செய்ய கூடுதலாக ரூ.37 கோடி மூலதன செலவினத்துக்கு நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

2021 செப்டம்பருடன் நிறைவடைந்த முதல் அரையாண்டில் நிறுவனம் ரூ.31.3 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்துக்கு நிகர அளவில் ரூ.30.8 கோடி இழப்பு ஏற்பட்டது.

மதிப்பீட்டு ஆறு மாத காலத்தில் வருவாய் ரூ.722.9 கோடியிலிருந்து ரூ.1,585.8 கோடியாக அதிகரித்தது என வீல்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com