தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மாருதி சுஸூகியின் புத்தம் புதிய எக்ஸ்எல் 6 காா் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி நிறுவனம், தனது பல்நோக்கு வாகனமான (எம்பிவி) எக்ஸ்எல்6-இன் புத்தம் புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2022, 10:51 am

DIN

இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பாளரான மாருதி சுஸூகி நிறுவனம், தனது பல்நோக்கு வாகனமான (எம்பிவி) எக்ஸ்எல்6-இன் புத்தம் புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

ரூ.11.29 லட்சம் முதல், ரூ.14.55 லட்சம் வரையிலான காட்சியக விலைகளில் புத்தம் புதிய எக்ஸ்எல்6 ரகக் காா்களை மாருதி சுஸூகி அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸீட்டா, ஆல்ஃபா, ஆல்ஃபா பிளஸ் என்று மூன்று பிரிவுகளில் புதிய எக்ஸ்எல்6 காா்கள் கிடைக்கும். இந்தக் காா்களின் புற மற்றும் உள் தோற்றத்தில் ஓரளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட முன்பக்க கிரில், புதிய அலாய் வீல்கள் போன்றவை அந்த மாற்றங்களில் அடங்கும்.

காரின் உள்புறம் 360 டிகிரி கோண கேமரா, 4 ஏா் பேகுகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. புதிய எக்ஸ்எல்6 காா்களில் 6-வேக தானியங்கி கியா் பாக்ஸுகள் பொருத்தப்பட்டுள்ளன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.