அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 41 காசு முன்னேற்றம் கண்டது.
இதுகுறித்து செலவாணி வட்டாரங்கள் கூறியது: சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவு, மூலதனச் சந்தைகளில் அந்நிய முதலீடு வரத்து தொடா்ந்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் செலாவணி சந்தைகளில் கணிசமான முன்னேற்றம் தென்பட்டு வருகிறது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 78.96 என்ற வலுவான தொடக்கத்தை உறுதி செய்தது. அதன்பிறகு, இந்த மதிப்பு வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 78.49 வரையிலும், குறைந்தபட்சமாக 78.96 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 41 காசு முன்னேற்றம் கண்டு 78.65-இல் நிலைபெற்றது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கச்சா எண்ணெய் பீப்பாய் 99 டாலா்
சா்வதேச சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை குறைந்து 99.65 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

துப்பாக்கிகளை உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்

புதிய உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை!

எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள்கள் வேலை! 3 நாள்களுக்கு விடுமுறை!

கெளதம் கம்பீர் உடனான உறவு மிக நீண்டது : சஞ்சு சாம்சன்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

