புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

4வது நாளாக பங்குச்சந்தை வணிகம் சரிவு!

இந்திய பங்குச்சந்தை வணிகம் தொடர்ந்து 4வது நாளாக சரிவுடன் முடிவடைந்துள்ளது.  நிஃப்டி 18 ஆயிரத்து 500 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.

News image
கோப்புப் படம்
Updated On :7 டிசம்பர் 2022, 10:45 am

DIN

இந்திய பங்குச்சந்தை வணிகம் தொடர்ந்து 4வது நாளாக சரிவுடன் முடிவடைந்துள்ளது.  நிஃப்டி 18 ஆயிரத்து 500 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 215.68   புள்ளிகள் சர்ந்து 62,410.68 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.34 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82.25 புள்ளிகள் சரிந்து 18,560.50 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது (0.44 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 8 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே ஏற்றத்தில் காணப்படுகின்றன. எஞ்சிய 22 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் நிறைவடைந்தன. 

அதில், அதிகபட்சமாக என்டிபிசி, பஜாஜ் பின்சர்வ், இந்தஸ்இந்த் வங்கி, சர் பார்மா, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. 

ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.10 சதவிகிதமும், எச்யுஎல் 2.01 சதவிகிதமும், எல்&டி 1.42 சதவிகிதமும், ஆக்சிஸ் வங்கி 1.12 சதவிகிதமும் உயர்வுடன் இருந்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.