ஊக்கமளிக்கும் பணவீக்க தரவுகள்: சென்செக்ஸ் 2-ஆவது நாளாக வெற்றி நடை

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நேர்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 145 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
ஊக்கமளிக்கும் பணவீக்க தரவுகள்: சென்செக்ஸ் 2-ஆவது நாளாக வெற்றி நடை
Updated on
1 min read

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நேர்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 145 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 52.30 புள்ளிகள் உயர்ந்து 18,660.30-இல் நிலைபெற்றது.
 அமெரிக்க பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்தது. இதனால், அந்த நாட்டு மத்திய வங்கி வட்டி விகிதத்தை பெரிய அளவில் உயர்த்த வாய்ப்பு இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தைக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐடி, மீடியா, மெட்டல், ரியல் எஸ்டேட் துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் சந்தை நேர்மறையாக முடிவடைந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்: காலையில் 152.34 புள்ளிகள் கூடுதலுடன் 62,685.94-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 62,835.11 வரை மேலே சென்றது. பின்னர், 62,591.28 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 144.61 புள்ளிகள் உயர்ந்து 62,677.91-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 டெக் மஹிந்திரா முன்னேற்றம்: பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 1.84 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டாடா ஸ்டீல், என்டிபிசி, எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் பேங்க், பவர் கிரிட், ஹெச்சிஎல் டெக், டாக்டர் ரெட்டி, எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, டிசிஎஸ் உள்ளிட்டவை 1 முதல் 1.70 சதவீதம் உயர்ந்தன. மேலும், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபின் சர்வ், இன்ஃபோஸிஸ், மாருதி, கோட்டக் பேங்க், கோட்டக் பேங்க், விப்ரோ உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 நெஸ்லே சரிவு: அதே சமயம், பிரபல நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான நெஸ்லே இந்தியா 1.66 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், இருந்தன. ஐசிஐசிஐ பேங்க், பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட், ஹிந்துஸ்தான் யுனி லீவர் ஆகியவை 1- 1.20 சதவீதம் வரை குறைந்தன. மேலும்,, ரிலையன்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
 சந்தை மதிப்பு உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ஒரேநாளில் ரூ.2.4லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.291.25 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) திங்கள்கிழமை ரூ. 619.92 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com