ஒன்பிளஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவிகள் விரைவில் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனம் மேலும் இரண்டு ஸ்மார்ட் டிவிகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட் டிவிகள் விரைவில் அறிமுகம்
Published on
Updated on
1 min read

ஒன்பிளஸ் நிறுவனம் மேலும் இரண்டு ஸ்மார்ட் டிவிகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் தொலைக்காட்சிக்கான தனது முதலீட்டை மேலும் விரிவுபடுத்த தயாராகி வருகிறது. இந்நிறுவனம் புதிதாக OnePlus TV Y1S மற்றும் OnePlus TV Y1S Edge ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. 

இந்த ஸ்மார்ட் டிவிகள் எப்போது சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்கிற விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இதற்கான தேதி ஆன்லைன் நிகழ்வு மூலம் விரைவில் அறிவிக்கப்படும் என்பதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. 
மேலும புதிய ஸ்மார்ட் டிவிகள் மலிவு விலையில் வெவ்வேறு திரை அளவுகளில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மேம்படுத்தப்பட்ட ஆடியோ உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய டிவிகளில் இடம்பெற்றிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com