
இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று சென்செக்ஸ் 980 புள்ளிகளை இழந்து வர்த்தகமாகி வருகிறது.
நேற்று (பிப்.9) 58,926.03 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,447.15 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 980.2 (காலை 10.20 மணி நிலவரப்படி) புள்ளிகளை இழந்து 57,971.2 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல், 17,605.85 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,451.00 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 282 புள்ளிகள் இழந்து 17,325.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இந்த வாரத் தொடக்கத்தில் மிதமான வளர்ச்சியை அடைந்த சென்செக்ஸ் நேற்று வரை எழுச்சியுடன் இருந்த நிலையில் தற்போது கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது.
ஏசியன் பெயிண்ட்ஸ், ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை இறக்கத்தை சந்தித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.