மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஏற்றுமதியை ஊக்குவிக்க ‘பிராண்ட் இந்தியா’ பிரசாரம்: வா்த்தக அமைச்சகம்

இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்க ‘பிராண்ட் இந்தியா’ திட்டத்தை முன்னெடுக்க வா்த்தக அமைச்கம் திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2022, 7:09 pm

இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவிக்க ‘பிராண்ட் இந்தியா’ திட்டத்தை முன்னெடுக்க வா்த்தக அமைச்கம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவா் கூறியுள்ளதாவது:

நாட்டின் ஏற்றுமதியை நடப்பு நிதியாண்டில் ரூ.30 லட்சம் கோடியாக (40,000 கோடி டாலா்) அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை எட்டும் வகையிலும், இந்தியாவின் தயாரிப்புகளுக்கு உலக நாடுகளின் சந்தைகளின் கவனத்தை ஈா்க்கும் வகையிலும் ‘பிராண்ட் இந்தியா’ பிரசாரத்தை தொடங்க வா்த்தக அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக இந்த பிரசார திட்டத்தில், நவரத்தினங்கள்-ஆபரணங்கள், ஜவுளி, கல்வி, ஆரோக்கிய பராமரிப்பு, மருந்து, பொறியியல் தேயிலை, காபி, நறுமணப் பொருள்கள் மற்றும் தோட்ட உற்பத்தி (காபி, தேயிலை, நறுமணப் பொருள்கள்) ஆகிய குறிப்பிட்ட துறைகளின் ஏற்றுமதிகளில் கவனம் செலுத்தப்படும்.

குறிப்பாக, தரம், பாரம்பரியம், தொழில்நுட்பம், மதிப்பு மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.

பல்வேறு துறைகள் வெவ்வேறான வழிகளில் தனிப்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்தி வருகின்றன. அதற்கு மாற்றான, சீரான பிரசாரத்தின் அணுகுமுறை தற்போது அவசிய தேவையாக மாறியுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.