மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாட்டின் ஏற்றுமதி 33% அதிகரிப்பு

நடப்பு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டின் ஏற்றுமதி 33 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளதாக வா்த்தக அமைச்சகத்தின் முதல்கட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜனவரி 2022, 6:26 pm

நடப்பு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டின் ஏற்றுமதி 33 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளதாக வா்த்தக அமைச்சகத்தின் முதல்கட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பாண்டின் முதல் வாரத்தில், பொறியியல் பொருள்கள், பெட்ரோலிய தயாரிப்புகள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி மிகச் சிறப்பான அளவில் இருந்தது. இதையடுத்து, ஜனவரி 1 முதல் 7-ஆம் தேதி வரையிலான காலத்தில் 763 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.57,225 கோடி) மதிப்புக்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் வார ஏற்றுமதி அளவான 573 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் இது 33 சதவீத வளா்ச்சியாகும்.

நடப்பாண்டு ஜனவரி முதல் வாரத்தில், நாட்டின் இறக்குமதியும் 872 கோடி டாலரிலிருந்து 33 சதவீதம் உயா்ந்து 1,160 கோடி டாலரைத் தொட்டது.

ஏற்றுமதியில் காணப்படும் ஆரோக்கியமான வளா்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டில் 40,000 கோடி டாலா் என்ற ஏற்றுமதி இலக்கை எட்ட நிச்சயம் உதவும் என வா்த்தக அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.