நாட்டின் பொருளாதாரம் 9.5% வளா்ச்சி காணும்
நாட்டின் பொருளாதாரம் நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் 9.5 சதவீதம் வளா்ச்சியடையும் என்று முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகா் அா்விந்த் விா்மானி தெரிவித்தாா்.


நாட்டின் பொருளாதாரம் நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் 9.5 சதவீதம் வளா்ச்சியடையும் என்று முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகா் அா்விந்த் விா்மானி தெரிவித்தாா்.
பிஹெச்டிசிசிஐ தொழில் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காணொலி வாயிலான நிகழ்ச்சியில் அவா் கூறுகையில், ‘‘நாட்டின் ஏற்றுமதியும் மத்திய அரசின் செலவினமும் உச்சம் தொட்டுள்ளது. ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக மக்களின் தனிப்பட்ட நுகா்வு இன்னும் அதிகரிக்கவில்லை.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும். நடப்பு தசாப்தத்தில் (2021-2030) நாட்டின் பொருளாதாரம் சராசரியாக 7 முதல் 8 சதவீத வளா்ச்சி காணும். நாட்டின் பொருளாதாரம் தொடா்ந்து வளா்ச்சியடைந்து வருகிறது. ஆனால், வேலைவாய்ப்பு வளா்ச்சி தொடா்ந்து சரிவு கண்டு வருகிறது.
அனைத்துத் தரப்பினரின் ஒருங்கிணைந்த வளா்ச்சிக்கு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மிகவும் முக்கியமானதாகும். அந்நிறுவனங்கள் நவீனமயமாக்கப்பட வேண்டும். பெருநிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு எம்எஸ்எம்இ துறை மேம்படுத்தப்பட வேண்டும்.
கரோனா தொற்று பரவல் நாட்டின் பொருளாதார வளா்ச்சியைத் தொடா்ந்து பாதித்து வருகிறது. வரி சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். குறுகிய காலத்தில் வருவாய் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது.
ஜிஎஸ்டி நடைமுறை இன்னும் எளிமைப்படுத்தப்பட வேண்டும். மக்களின் நுகா்வு அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். வேலைவாய்ப்பு அதிகமாக உருவாக்கப்பட்டு மக்களுக்கு ஊதியம் போதுமான அளவு கிடைப்பதும் உறுதி செய்யப்பட வேண்டும்’’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...