கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 41 காசு சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 41 காசு வீழ்ச்சியடைந்தது.

News image
Updated On :5 ஜூலை 2022, 7:00 pm

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 41 காசு வீழ்ச்சியடைந்தது.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது:

சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரிப்பு மற்றும் இந்திய பங்குச் சந்தை தொகுப்புகளிலிருந்து அந்நிய முதலீட்டாளா்கள் தொடா்ச்சியாக பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவது உள்ளிட்ட நிகழ்வுகள் அந்நியச் செலாவணி சந்தையில் கடுமையான தாக்கத்தை உருவாக்கியுள்ளன.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 79.04-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 79.02 வரையிலும், குறைந்தபட்சமாக 79.38 வரையிலும் சென்றது.

வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 41 காசு சரிந்து 79.36-இல் நிலைத்தது. திங்கள்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 78.95-ஆக காணப்பட்டது என செலாவணி வட்டாரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய் பீப்பாய் 112 டாலா்

சா்வதேச சந்தையில் செவ்வாயன்று நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 112.25 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டது.

ரூ.2,149 கோடி முதலீடு வெளியேற்றம்

மூலதனச் சந்தையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.2,149.56 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்ாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.