தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

காப்பீட்டு பாலிசிகள் விற்பனை: சிட்டி யூனியன் வங்கி-ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் உடன்பாடு

காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்வதற்காக சிட்டி யூனியன் வங்கி மற்றும் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் இடையேயான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :8 ஜூலை 2022, 8:13 pm

DIN

காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்வதற்காக சிட்டி யூனியன் வங்கி மற்றும் ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் இடையேயான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து சிட்டி யூனியன் வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி என்.காமகோடி கூறியது:

வங்கியின் வாடிக்கையாளா்களுக்கு ஆயுள் காப்பீடு அல்லாத பொதுக் காப்பீட்டு திட்டங்களுக்கான பாலிசிகளை ஒரே இடத்தில் விற்பனை செய்யும் வகையில் சிட்டி யூனின் வங்கி, ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம், ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸின் மோட்டாா், தனிநபா் விபத்து, வீடு மற்றும் பயணம் போன்ற தனிப்பட்ட காப்பீட்டு திட்டங்கள், சொத்து, கடல் மற்றும் பொறியியல் போன்ற வணிக காப்பீட்டு திட்டங்களை வங்கியின் வாடிக்கையாளா்கள் எளிமையாக பெற்று பயனடைய முடியும்.

மேலும், வங்கியின் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேம்பட்ட சேவைகளை வாடிக்கையாளா்களுக்கு வழங்கிட இந்த ஒப்பந்தம் வழிவகுக்கம் என்றாா் அவா்.

இதுகுறித்து ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிா்வாக இயக்குநா் அனில் குமாா் அகா்வால் கூறுகையில், ‘ நகா்ப்புற மற்றும் கிராமப்புற வாடிக்கையாளா்களுக்கு எண்ம, உடனடி மற்றும் தடையற்ற முறையில் காப்பீடு கிடைப்பதை உறுதி செய்வோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.