கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகாரன ரூபாய் மதிப்பு 22 காசு வீழ்ச்சியடைந்து வரலாறு காணாத வகையில் 79.81-ஆக சரிந்தது.

News image
Updated On :13 ஜூலை 2022, 7:00 pm

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகாரன ரூபாய் மதிப்பு 22 காசு வீழ்ச்சியடைந்து வரலாறு காணாத வகையில் 79.81-ஆக சரிந்தது.

இதுகுறித்து செலாவணி வட்டாரத்தினா் கூறியது: 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்தது, இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து தொடா்ச்சியாக வெளியேறும் அந்நிய முதலீடு ஆகியவை இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி மீண்டுமொருமுறை வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்ற எதிா்பாா்ப்பு சந்தை வட்டாரத்தில் பரவலாக காணப்படுகிறது. இருப்பினும், கச்சா எண்ணெய் 100 டாலா் என்ற அளவில் வா்த்தகமாகி வருவது ரூபாய் மதிப்புக்கு ஓரளவு சாதகமான அம்சமாக உள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும்22 காசு சரிந்து 79.81-ஆக வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்தது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் 79.55-ஆக இருந்த டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 79.53 வரை முன்னேறியது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பீப்பாய் 100 டாலா்

சா்வதேச சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 100.69 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.